விருதுநகர்
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்
|முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அருப்புக்கோட்டை,
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
காலை உணவு திட்டம்
முதல்- அமைச்சரின் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி அருப்புக்கோட்டை ஒன்றியம் பாலவனத்தம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திட்டத்தினை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். பின்னர் அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
அப்போது அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது:-
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன் முறையாக காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் வயிறார உணவு அருந்தினால் தான் நன்றாக படிக்க முடியும் என்ற எண்ணத்தில் இந்த திட்டத்தினை தொடங்கி உள்ளார்.
உயர்ந்த நிலை
குழந்தைகள் நன்கு படித்து உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த காலை உணவு திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கலெக்டர் ஜெயசீலன், ஒன்றியக்குழு தலைவர் சசிகலா, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், ஒன்றிய செயலாளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ், பாலவனத்தம் ஊராட்சி மன்ற தலைவர், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.