திருவண்ணாமலை
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்
|வேளானந்தல் தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்.
வேட்டவலம்
வேட்டவலம் அருகே வேளானந்தல் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா இன்று நடந்தது.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, தாசில்தார் சாப்ஜான், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பரிமேலழகன், ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் மகாலட்சுமி, ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் படவேட்டாள் கண்ணன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்து, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.
இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.