< Back
மாநில செய்திகள்
கோவையில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை - முதல்-அமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்
மாநில செய்திகள்

கோவையில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை - முதல்-அமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்

தினத்தந்தி
|
4 Jan 2024 3:50 PM IST

மொத்தம் 2.5 டன் எடையிலான இரும்பைக் கொண்டு திருவள்ளுவர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

கோவை,

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக குறிச்சி குளம் பகுதியில், தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 20 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 2.5 டன் எடையிலான இரும்பைக் கொண்டு இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். மேலும் கோவை மாநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தையும் முதல்-அமைச்சர் திறந்து வைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்