< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சாலையோரம் நின்றிருந்த மாற்றுத்திறனாளி - காரை நிறுத்தி மனுவை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர்
|7 March 2023 7:22 PM IST
மனுவை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர், தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
தூத்துக்குடி,
நாகர்கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி விமான நிலையத்திற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் மாற்றுத்திறனாளி ஒருவர் முதல்-அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுப்பதற்காக தனது குடும்பத்துடன் காத்துக்கொண்டிருந்தார்.
இதனைக் கண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது காரை நிறுத்தி அந்த நபரிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார். 5 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி சந்தையில் வேலை செய்து கொண்டிருந்த போது, மூட்டை விழுந்ததில் கழுத்து முறிவு ஏற்பட்டு மாற்றுத்திறனாளியாகிவிட்ட செல்வகுமார், 10-ம் வகுப்பு வரை படித்துள்ள தனது மனைவிக்கு ஏதாவது வேலை வழங்குமாறு முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர், தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.