< Back
மாநில செய்திகள்
ரூ.184 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
மாநில செய்திகள்

ரூ.184 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தினத்தந்தி
|
27 Dec 2023 10:52 AM IST

ரூ.171 கோடியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

சென்னை:

சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் ரூ.171 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை ஆகிய துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.184 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

மேலும் செய்திகள்