< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'மக்களை சந்திக்க நேரமில்லை; ஆனால் ஐ.பி.எல். போட்டியைக் காண முதல்-அமைச்சர் நேரம் செலவிடுகிறார்' - விஜய பிரபாகரன் பேட்டி
|24 May 2023 3:55 PM IST
கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களுக்கே நிதி கொடுக்கப்பட்டுள்ளது என்று விஜய பிரபாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை,
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், 'மத்திய அரசு 2 ஆயிரம் ரூபாய் செல்லாது எனக் கூறவில்லை, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் நடவடிக்கையை கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாகவே பார்க்கிறோம்' என்று தெரிவித்தார்.
மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை சந்திக்க நேரமில்லை என்று கூறுவதாகவும், ஆனால் ஐ.பி.எல். போட்டிகளைக் காண 6 மணி நேரம் செலவிடுகிறார் என்றும் விஜய பிரபாகரன் விமர்சித்தார். மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களுக்கே நிதி கொடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், இங்கு என்ன நடக்கிறது என்பதே முதல்-அமைச்சருக்கு தெரியாத நிலையில் தி.மு.க. ஆட்சி உள்ளது என்று கூறினார்.