< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
|30 Oct 2023 9:08 AM IST
மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மதுரை,
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வருகை தந்துள்ளார். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும், சிலைக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்க தேவரின் படத்திற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதையடுத்து மதுரையில் அமையவுள்ள இரண்டு உயர்மட்ட மேம்பால கட்டுமான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் மதுரை தெப்பக்குளம் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.