< Back
மாநில செய்திகள்
தெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
மாநில செய்திகள்

தெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

தினத்தந்தி
|
2 Jun 2023 2:02 PM IST

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

தெலுங்கானா மாநில கவர்னரும் புதுச்சேரி துணைநிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி துணைநிலை கவர்னருமான சகோதரி தமிழிசை சவுந்தரராஜனுக்கு எனது அன்புமிகு பிறந்தநாள் வாழ்த்துகள்!" என்று கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்