< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ரெயில் விபத்து தொடர்பாக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
|3 Jun 2023 8:50 AM IST
ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை,
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலைய கட்டுப்பாட்டு அறையில் ரெயில்வே கோட்ட மேலாளர், தலைமைச் செயலாளர், உள்ளிட்டோருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சிறப்பு உதவி மையத்தில் ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரெயில்வே அதிகாரிகளிடம் ரெயில் விபத்து, மீட்பு பணிகள் தொடர்பாக விவரங்களை கேட்டறிந்து வருகிறார்.