< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அம்மா உணவகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
|19 July 2024 1:32 PM IST
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை,
ஏழை மக்கள் பயன்பெறும் அம்மா உணவகத்தின் செயல்பாடு, உணவின் தரம் உள்ளிட்டவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் உணவு அருந்தியவரிடம் உணவின் தரம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் அம்மா உணவகத்தின் உணவு தயாரிப்பு முறைகள் , உணவகம் செயல்படும் முறை குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.