< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மறைந்த முன்னாள் தலைமை செயலாளர் சபாநாயகம் குடும்பத்தினருடன், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
|24 Jun 2023 8:24 PM IST
சபாநாயகம் இல்லத்திற்கு சென்ற முதல் அமைச்சர், அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
சென்னை,
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர் சபாநாயகம். சென்னை ஆர்.ஏ.புரம் பிஷப் கார்டனில் வசித்து வந்த அவர், நேற்றுமுன் தினம் பிற்பகல் 3.30 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 101.
அவரது மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து இருந்தார். முதல் அமைச்சரின் உத்தரவின் பேரில் சபாநாயகம் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செய்யப்பட்டது. காவல்துறை மரியாதைக்கு பிறகு, பெசன்ட்நகர் மின்மயானத்தில் சபாநாயகம் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், மறைந்த முன்னாள் தலைமை செயலாளர் சபாநாயகம் குடும்பத்தினரை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். சபாநாயகம் இல்லத்திற்கு சென்ற முதல் அமைச்சர், அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.