< Back
மாநில செய்திகள்
கடம்பூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

கடம்பூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தினத்தந்தி
|
16 May 2024 8:56 PM IST

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

சேலம் மாவட்டம், கடம்பூர் கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், கடம்பூர் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (16.5.2024) மாலை சுமார் 5.00 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், கூலமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (வயது 45) த/பெ.ஆண்டி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்