< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
|10 Aug 2024 12:22 PM IST
ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஜார்க்கண்ட் மாநில முதல்-மந்திர ஹேமந்த் சோரன் இன்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பலமான தடைகளை எதிர்கொண்டாலும், மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் உங்களின் மனப்பான்மையை அசைக்க முடியாதது என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். அதே வலிமையுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து வழிநடத்துங்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.