< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய சட்டமன்றத்தை கட்டுவார் - அமைச்சர் துரைமுருகன்
|20 April 2023 12:22 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய சட்டமன்றத்தை கட்டுவார் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சென்னை,
தமிழ்நாடு சட்டசபையில் பொது (தேர்தல்) துறை மீதான மானிய கோரிக்கையில் பேசிய உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
புதிய சட்டமன்றம் கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள். இதனை நாங்களும் ஒத்துக்கொள்கிறோம். விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்தில் புதிய சட்டமன்றத்தை கட்டுவார். கிண்டி ராஜ்பவன் நம்முடைய இடம். அதன் வரலாற்றை நான் படித்து பார்த்தேன். அதை எடுக்கலாம். கிண்டி ரேஸ் கிளப் 700 ஏக்கர் இடமும் நம்முடையதுதான்.
இதில் எங்கேயோ? முதல்-அமைச்சர் தனது ஆட்சி காலத்தில் புதிய சட்டமன்றம் உருவானது என்பதை அவர் செய்ய வேண்டும். இதை இந்த ஆட்சி காலத்திலேயே செய்ய வேண்டும். அப்போதுதான் நாம் இருப்போம் என்று அவர் பேசினார்.