< Back
மாநில செய்திகள்
இன்று தர்மபுரிக்கு வருகை தருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: அரசு விழாவில் பங்கேற்பு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

இன்று தர்மபுரிக்கு வருகை தருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: அரசு விழாவில் பங்கேற்பு

தினத்தந்தி
|
11 March 2024 5:21 AM IST

3 மாவட்டங்களை சேர்ந்த 8,736 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

தர்மபுரி,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தர்மபுரியில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சேலம் விமான நிலையத்திற்கு வருகிறார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் தர்மபுரி அரசு கலைக்கல்லூரிக்கு வந்து அரசு விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவில் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் குறித்த குறும்படம் திரையிடப்படுகிறது. இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தர்மபுரி, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முடிவுற்ற 993 திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார்.

இதை தொடர்ந்து ரூ.560 கோடி மதிப்பீட்டில் 75 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா பேருரையாற்றுகிறார். தொடர்ந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களை சேர்ந்த 8,736 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் வைத்தியநாதன், கூடுதல் கலெக்டர் கவுரவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.

மேலும் செய்திகள்