< Back
மாநில செய்திகள்
கோவையில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
மாநில செய்திகள்

கோவையில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

தினத்தந்தி
|
24 Sept 2023 11:53 AM IST

கோவையில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

கோவை,

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வந்தார். கோவை விமான நிலையத்திற்கு வந்த முதல்-அமைச்சருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கோவை மாநகராட்சி விளாங்குறிச்சி பகுதியில் 8, 5 வார்டுகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் மற்றும் நெடுஞ்சாலைப் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பணிகளின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்