< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"கலைஞர் 100" நூலை வெளியிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
|20 Sept 2023 8:27 PM IST
"கலைஞர் 100" நூலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட முதல் பிரதியை கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார்.
சென்னை,
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று "கலைஞர் 100" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு "கலைஞர் 100" நூலினை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையினர் கலந்து கொண்டனர்.
பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளைப் பற்றிய புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார்.