< Back
மாநில செய்திகள்
நாஞ்சில் சம்பத் உடல்நலம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்...!
மாநில செய்திகள்

நாஞ்சில் சம்பத் உடல்நலம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்...!

தினத்தந்தி
|
25 Jan 2023 3:39 PM IST

நாஞ்சில் சம்பத் உடல்நலம் குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

சென்னை,

நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவு காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரின் உடல்நலம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று (25.1.2023) உடல்நலக்குறைவால் குமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் நாஞ்சில் சம்பதின் உடல்நலம் குறித்து அவரது மகன் மருத்துவர் சரத் பாஸ்கர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

மேலும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ஆர். மகேஷ் ஆகியோரையும் தொடர்புகொண்டு, நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான உதவிகளை செய்திடுமாறு அறிவுறுத்தினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்