< Back
மாநில செய்திகள்
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
15 July 2023 5:40 PM IST

நூலக வளாகத்தில் கருணாநிதிக்கு அமைக்கப்பட்டுள்ள உருவச்சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மதுரை,

மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இந்த நூலகத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. சுமார் ரூ.206 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை திறந்து வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரைக்கு வருகை தந்துள்ளார்.

அங்கு நூலக வளாகத்தில் கருணாநிதிக்கு அமைக்கப்பட்டுள்ள உருவச்சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்