< Back
மாநில செய்திகள்
திமுக தலைவராக 6ம் ஆண்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - கலைஞர் நினைவிடத்தில் மரியாதை
மாநில செய்திகள்

திமுக தலைவராக 6ம் ஆண்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

தினத்தந்தி
|
28 Aug 2023 10:28 PM IST

திமுக தலைவராக பொறுப்பேற்று 6-ம் ஆண்டு தொடங்கியதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

சென்னை,

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக பொறுப்பேற்று 6-ம் ஆண்டு தொடங்கியதையொட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கடந்த 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து திமுக கட்சியின் செயல் தலைவராக பதவி வகித்து வந்த மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி மறைந்த பிறகு, 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி தி.மு.கவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற 15வது உட்கட்சித் தேர்தலில் மீண்டும் 2வது முறையாக திமுக தலைவராக போட்டியின்றி தேர்வானார். தொடர்ந்து கழகத்தின் தலைவராக 5 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் மு.க.ஸ்டாலின், இன்று ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்தார்.

மேலும் செய்திகள்