இந்தியாவின் நம்பர்-1 செஸ் வீரரான குகேஷ்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...!
|உலக செஸ் வீரர்கள் தர வரிசைப் பட்டியலில் குகேஷ் 9-வது இடத்திற்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவின் நம்பர்-1 வீரரானார்.
சென்னை,
தமிழக செஸ் வீரர் குகேஷ் இந்தியாவின் நம்பர்-1 செஸ் வீரராக மாறியுள்ளார். உலக செஸ் வீரர்கள் தர வரிசைப் பட்டியலில் குகேஷ் 9-வது இடத்திற்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவின் நம்பர்-1 வீரரானார்.
இந்தியாவின் நம்பர்-1 வீரராக இருந்த விஸ்வநாதன் ஆனந்தை இரண்டாம் இடத்திற்கு தள்ளி அவர் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்நிலையில் இந்தியாவின் நம்பர்-1 செஸ் வீரராக உயர்ந்துள்ள குகேஷ்-க்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
கிராண்ட்மாஸ்டர் குகேஷ், முதல் முறையாக உலகின் முதல் 10 (FIDE) தரவரிசையில் நுழைந்த உங்கள் அபாரமான சாதனைக்கு வாழ்த்துகள்.
உங்களது உறுதியும், திறமையும் உங்களை செஸ் விளையாட்டின் உயர்மட்ட நிலைக்குத் கொண்டு சென்று, உங்களை அதிக மதிப்பெண் பெற்ற இந்திய வீரராக மாற்றியுள்ளது.
உங்கள் சாதனை, எல்லா இடங்களிலும் உள்ள இளம் வீரர்களுக்கு ஓர் உத்வேகமாகவும், தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் தருணமாகவும் உள்ளது. இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.