< Back
மாநில செய்திகள்
சோனியா காந்தியுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திப்பு
மாநில செய்திகள்

சோனியா காந்தியுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திப்பு

தினத்தந்தி
|
27 Sept 2024 2:32 PM IST

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார்.

புதுடெல்லி,

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக பிரதமர் மோடியை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசினார். 45 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நீடித்தது. பிரதமர் மோடியை சந்தித்த பிறகு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சோனியா காந்தியை சந்தித்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், " சோனியாகாந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்" என்றார்.

மேலும் செய்திகள்