அடுத்த பிறந்தநாளில் துணை முதலமைச்சரா? 'நறுக்' என பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின்
|உதயநிதி ஸ்டாலின் தனது 46-வது பிறந்தநாளையொட்டி, சென்னை பெரியார் திடலுக்கு சென்று பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
சென்னை,
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விரைவில் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் அவ்வப்போது பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது 46-வது பிறந்தநாளையொட்டி, சென்னை பெரியார் திடலுக்கு சென்று பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் துணை முதலமைச்சர் பதவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, நான் துணை முதலமைச்சர் ஆக வேண்டுமா என்பதை முதலமைச்சர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், தனது பிறந்தநாளையொட்டி செய்யும் நலத்திட்ட உதவிகள் மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் அமைச்சர் சேகர்பாபு செய்யும் நலத்திட்ட நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.
தொடர்ந்து, பிறந்தநாளுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், " ஒரு செய்தியும் இல்லை. நீங்க வாழ்த்து சொன்னீர்கள்... நான் நன்றி கூறுகிறேன்" என்றார். டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இளைஞரணி சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் எனவும் கூறினார்.