< Back
மாநில செய்திகள்
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  மல்யுத்த வீரர்களுக்கு  முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆதரவு
மாநில செய்திகள்

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுக்கு முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆதரவு

தினத்தந்தி
|
1 May 2023 5:30 PM IST

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுக்கு முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சென்னை,

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல் அமைச்சர் ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது.

அவர்களைத் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திரு. புதுகை அப்துல்லா அவர்கள் இன்று தி.மு.க. சார்பில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்துள்ளார். நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக உடன் நிற்போம்" என்றார்.

மேலும் செய்திகள்