< Back
மாநில செய்திகள்
4 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை
மாநில செய்திகள்

4 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை

தினத்தந்தி
|
18 Dec 2023 8:21 PM IST

வெள்ளம் பாதித்த 4 மாவட்ட ஆட்சியர்களுடன் டெல்லியில் இருந்தபடி முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

புதுடெல்லி,

தென் மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதல் இடைவிடாது பெய்த மழையால் 4 மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழையால் திரும்பிய பக்கம் எல்லாம் தண்ணீராய் காட்சி அளிக்கிறது. தாமிரபரணி ஆற்றில் இரு கரையும் தொட்டு வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் தண்ணீரில் மிதக்கிறது. வெள்ளத்தால் பேருந்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் உள்பட பல ஊர்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு தனித்தீவு போல காட்சி அளிக்கிறது. தொடர்ந்து அங்கு மழை பெய்து வரும் நிலையில், வெள்ளம் பாதித்த 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அவசர ஆலோசனை நடத்தினார். நிவாரண பணிகளை துரிதப்படுத்தவும் அவர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்