< Back
மாநில செய்திகள்
வேலூரில் கட்டப்படும் மினி டைடல் பூங்காவுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார்  முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

வேலூரில் கட்டப்படும் மினி டைடல் பூங்காவுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
18 Feb 2023 7:22 AM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல் அமைச்சர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கட்டப்படவுள்ள மினி டைடல் பூங்காவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, இன்று காலை 11 மணியளவில் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டவுள்ளார்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் வேலூரில் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதே போல் ஓசூர் சிப்காட் தொழிற்பூங்காவில் நிறுவப்பட்டுள்ள, ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின், அதி உயர் தூய்மையான திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை மற்றும் சென்னையில் நிறுவப்பட்டுள்ள ஜி.எக்ஸ். குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக முதல் அமைச்சர் திறந்து வைக்கிறார்.

மேலும் தமிழ்நாடு அரசு மற்றும் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் 20 கிகாவாட் மின்கலன்கள் உற்பத்தித் திறன் கொண்ட ஆலைகளை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் முதல் அமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்