< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை இன்று திறந்துவைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|17 Nov 2023 6:53 AM IST
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, மாற்றுத்திறனாளி குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணையையும் முதல்-அமைச்சர் வழங்குகிறார்.
சென்னை,
தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன.
இந்த குடியிருப்புகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். அத்துடன், பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையை முதல்-அமைச்சர் வழங்குகிறார்.
மேலும், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, மாற்றுத்திறனாளி குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணையையும் முதல்-அமைச்சர் வழங்குகிறார்.