< Back
மாநில செய்திகள்
மறைந்த கு.க.செல்வம் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
மாநில செய்திகள்

மறைந்த கு.க.செல்வம் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

தினத்தந்தி
|
3 Jan 2024 2:45 PM IST

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் 2016-ல் போட்டியிட்ட கு.க.செல்வம், வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

சென்னை,

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ கு.க.செல்வம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவர் சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் 2016-ல் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார். இதையடுத்து 2020-ல் பா.ஜ.க.வில் சேர்ந்து மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்த கு.க.செல்வம், 2022-ல் மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார்.

அதன்பின்னர் தொடர்ந்து தி.மு.க.வில் பணியாற்றி வந்த கு.க.செல்வம், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது உடலுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மறைந்த கு.க.செல்வம் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு முதல்-அமைச்சர் ஆறுதல் கூறினார்.



மேலும் செய்திகள்