< Back
மாநில செய்திகள்
கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
5 March 2023 7:25 PM IST

2 ஏக்கர் பரப்பளவில் ரூ.18.43 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை,

களஆய்வில் முதல்-அமைச்சர் திட்டத்தின்கீழ் ஆய்வு செய்வதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை சென்றுள்ளார். காலை 9 மணிக்கு விமானம் மூலம் மதுரை சென்ற அவர், மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

அந்த கூட்டத்தில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட கலெக்டர்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். 5 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்கள், சட்டம்- ஒழுங்கு நிலைமை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இதை தொடர்ந்து மாலை 6 மணியளவில், சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.

இந்த அருங்காட்சியம், 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.18.43 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கீழடியில் இதுவரை 8 கட்ட அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன. 8 கட்ட அகழாய்வில் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய 20,000க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்