< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தஞ்சையில் ரூ.133.51 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கிவைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|27 July 2023 10:08 PM IST
புதிதாகக் கட்டப்படவுள்ள மாநகராட்சி ஆணையர் குடியிருப்பு கட்டடம் கட்டும் பணிக்கும் முதல் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
தஞ்சாவூர்,
தஞ்சாவூரில் ரூ.133.51 கோடி மதிப்பிலான முடிவடைந்த திட்டப்பணிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தஞ்சாவூர் மாநகராட்சியின் சார்பில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், 61 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாநாட்டு மையக் கட்டடம், ஆம்னி பேருந்து நிறுத்தம், 14 மாநகராட்சி பள்ளிகள் சீர்மிகு பள்ளிகளாக மாற்றம் உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, பொது நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிதாகக் கட்டப்படவுள்ள மாநகராட்சி ஆணையர் குடியிருப்பு கட்டடம் கட்டும் பணிக்கும் முதல் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.