< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை
|15 Sept 2023 9:50 AM IST
பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காஞ்சீபுரம்,
பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் , அண்ணா பிறந்த காஞ்சீபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில், குடும்பத்தலைவிகள் ஆவலுடன் எதிர்பார்த்த ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைக்கிறார்.
நிகழ்ச்சிக்கு முன்னர் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு, காஞ்சீபுரம் அன்னை இந்திராகாந்தி சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.