இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
|இறுதிப்போட்டியில் இந்திய அணியின் பக்கமே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.
அகமதாபாத்,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் நடந்தது. லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
கிரிக்கெட் உலகமே ஆவலோடு எதிர்நோக்கும் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பலப்பரீட்சையில் இறங்குகின்றன. இதில் சொந்த மண்ணில் இந்திய அணி இறுதிப்போட்டியில் விளையாட உள்ளதால் இந்திய அணியின் பக்கமே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.
இந்த நிலையில், உலக கோப்பையை வெல்ல, இந்திய அணிக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் "வாருங்கள் இந்தியா! உலக கோப்பையை மூன்றாக ஆக்குங்கள்.!" என்று தெரிவித்துள்ளார்.