< Back
மாநில செய்திகள்
பயிர் காப்பீடு திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணி - முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
மாநில செய்திகள்

பயிர் காப்பீடு திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணி - முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
10 Jan 2023 10:09 AM GMT

பயிர் காப்பீடு திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை,

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 2021-22ம் ஆண்டு இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட குளிர்பருவ பயிர்களுக்கு இழப்பீட்டு தொகையாக சுமார் 2 லட்சத்து 2 ஆயிரம் விவசாயிகளுக்கு 284 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

அதே போல் 2022-23ம் ஆண்டிற்கு விதைப்பு பொய்த்தல் இனத்தின் கீழ் 19 ஆயிரத்து 282 விவசாயிகளுக்கு 34 கோடியே 30 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. மொத்தத்தில் 2 லட்சத்து 21 ஆயிரம் விவசாயிகளுக்கு 318 கோடியே 30 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையாக வழங்கப்படுகிறது. இந்த பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகைக்கான ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.


மேலும் செய்திகள்