< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தூத்துக்குடியில் மறைந்த எழுத்தாளர் கி.ரா.வின் நினைவரங்கம் - காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
|2 Dec 2022 8:48 PM IST
மறைந்த எழுத்தாளர் கி.ரா.வின் நினைவரங்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
சென்னை,
தூத்துக்குடி மாவட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு நினைவரங்கம், சிலை மற்றும் மின்னணு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் நேரில் பங்கேற்றனர். இதனை முன்னிட்டு தமிழக அரசுக்கு எழுத்தாளர் கி.ரா.வின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.