< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
இலவச மின்சார பயனாளர்களில் 50 ஆயிரமாவது நபருக்கு மின் இணைப்பு ஆணை - முதல்-அமைச்சர் வழங்கினார்
|11 Jan 2023 2:46 PM IST
இலவச மின்சார பயனாளர்களில் 50 ஆயிரமாவது நபருக்கு மின் இணைப்புக்கான ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள விவசாய பயனாளர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் 50 ஆயிரமாவது விவசாய பயனாளருக்கு இன்று மின் இணைப்பிற்கான ஆணை வழங்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மின் இணைப்பு ஆணையை வழங்கினார். இதனை தொடர்ந்து இலவச விவசாய மின் இணைப்புகளைப் பெற்ற 50 ஆயிரம் விவசாய பயனாளர்களின் பெயர், அலைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தொகுப்பை முதல்-அமைச்சரிடம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.