< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'முதல்வர் திறனறி தேர்வு திட்டம்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
|5 April 2023 7:27 PM IST
முதல்வர் திறனறி தேர்வு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை,
சென்னை ஐஐடி வளாகத்தில் முதல்வர் திறனறி தேர்வு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அந்நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
முதல்வர் திறனறி தேர்வு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் 1000 பேருக்கு, அவர்கள் 12ம் வகுப்பு நிறைவு செய்தவுடன் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றார். இத்திட்டத்தில் தேர்வாகும் 1000 மாணவர்களுக்கு ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி வழிகாட்டுதல் நடத்தப்படும் என்றார்.
மேலும், அதே மாணவர்கள் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு வரும்போது ஆண்டிற்கு ரூ. 12,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.