< Back
மாநில செய்திகள்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு டெல்லி பயணம்
மாநில செய்திகள்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு டெல்லி பயணம்

தினத்தந்தி
|
12 March 2024 2:35 PM IST

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சத்யபிரதா சாகு டெல்லி சென்றுள்ளார்.

சென்னை,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று டெல்லி சென்றுள்ளார்.

டெல்லியில் இன்றும், நாளையும் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் டெல்லி சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகள்