< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நாளை சென்னை வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
|22 Feb 2024 10:56 AM IST
நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்துகிறார்
சென்னை,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நாளை சென்னை வருகிறார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்துகிறார்
நாளை பிற்பகல், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினருடன் ஆலோசனை நடத்துகிறார். நாளை மறுநாள் தமிழகம், கர்நாடகா, கேரளா மாநில தேர்தல் அதிகாரிகள், வருமான வரி, சுங்கத்துறை உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகிறார்.