< Back
மாநில செய்திகள்
சாதிப் பெயரை கூறி திட்டிய தலைமை காவலர் - ஆடியோ இணையத்தில் பரவியதையடுத்து ஆயுதப்படைக்கு மாற்றம்
மாநில செய்திகள்

சாதிப் பெயரை கூறி திட்டிய தலைமை காவலர் - ஆடியோ இணையத்தில் பரவியதையடுத்து ஆயுதப்படைக்கு மாற்றம்

தினத்தந்தி
|
7 April 2023 10:43 PM IST

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே, சாதிப் பெயரை கூறி, இழிவாக பேசிய தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே, சாதிப் பெயரை கூறி, இழிவாக பேசிய தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

கிருஷ்ணகுமார் என்பவர், விஜயா என்பவரின் வீட்டிற்கு சென்று, ஹெல்த் இன்சூரன்ஸ் தொடர்பாக பிரச்சினை செய்துள்ளார். இதுகுறித்து செல்போன் மூலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. எதிர் தரப்பில் பேசிய தலைமை காவலர் சிவகுமார், செல்போனை கிருஷ்ணகுமாரிடம் கொடுக்குமாறு கூறி, அவரை சாதிப் பெயரை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதுதொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கிருஷ்ணகுமாரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்