< Back
மாநில செய்திகள்
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ். ராமன் நியமனம்
மாநில செய்திகள்

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ். ராமன் நியமனம்

தினத்தந்தி
|
12 Jan 2024 10:07 PM IST

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ். ராமனை நியமித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தலைமை வழக்கறிஞர் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்வதாக ஆர்.சண்முகசுந்தரம் அறிவித்தார்.

தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக சண்முகசுந்தரம் தெரிவித்தார். இதனால் அடுத்த தலைமை வழக்கறிஞராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ். ராமனை நியமித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்