< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் பாடிய சிவபக்தர்கள்...!
|22 Jun 2022 3:38 PM IST
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி சிவபக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடினர்.
சிதம்பரம்,
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம், பாட இந்து அறநிலையத் துறையினர் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை முதல் சிதம்பரம் கீழ சன்னதியில் பகுதியில், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து 11.30 மணி அளவில் சிவ பக்தர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் நடராஜர் கோவிலுக்கு சென்று சித்சபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் பாடினர்.
அப்போது கோட்டாட்சியர் ரவி, சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ், சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ், உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.