< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
கோவையில் ரூ.10 நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி - புதிதாக திறக்கப்பட்ட கடையில் அறிவிப்பு

10 Nov 2022 5:46 AM IST
10 ரூபாய் நாணயங்களை முதலில் கொண்டு வரும் 125 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கோவை,
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட 10 ரூபாய் நாணயம் தற்போது புழக்கத்தில் இருந்தாலும், பல இடங்களில் இந்த நாணயத்தை வாங்க தயங்குவதாக குற்றச்சாடுகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் திறக்கப்பட்ட புதிய உணவகத்தில் 10 ரூபாய் நாணயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.
அதன்படி 10 ரூபாய் நாணயங்களை முதலில் கொண்டு வரும் 125 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரியாணி கடை முன்பு ஏராளமானோர் திரண்ட நிலையில், 10 ரூபாய் நாணயத்துடன் முதலில் வந்த 125 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.