< Back
மாநில செய்திகள்
கரூரில் அரசு அலுவலர்களுக்கான செஸ் போட்டி: கலெக்டர் பிரபுசங்கர் பங்கேற்று விளையாடினார்
கரூர்
மாநில செய்திகள்

கரூரில் அரசு அலுவலர்களுக்கான செஸ் போட்டி: கலெக்டர் பிரபுசங்கர் பங்கேற்று விளையாடினார்

தினத்தந்தி
|
23 July 2022 11:51 PM IST

கரூரில் அரசு அலுவலர்களுக்கான செஸ் போட்டி நடந்தது. இதில் கலெக்டர் பிரபுசங்கர் பங்கேற்று விளையாடினார்.

செஸ் போட்டி

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு அலுவலர்களுக்கான செஸ் போட்டியினை கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்து, பங்கேற்று விளையாடினார்.

பேட்டி

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியினை விளம்பரப்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகள், அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவக்கல்லுரி மாணவ, மாணவிகள், நீதிமன்ற வழக்கறிஞர்கள், பணியாளர்களுக்கு சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும், இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி, அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் முதல்-அமைச்சரின் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான விழிப்புணர்வு குறும்படங்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரையிடப்பட்டன.

மேலும் செஸ் மாதிரி வரையப்பட்ட கோலங்கள் (ரங்கோலி), செல்பி பாயிண்ட், பஸ் பின்புறத்தில் பதாகைகள், பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது உள்ளிட்ட செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

பரிசுகள்

அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு அலுவலர்களுக்கான சதுரங்க விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் நானும் கலந்து கொண்டு விளையாடினேன், இதில் வெற்றி பெற்றவர்களை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்