< Back
மாநில செய்திகள்
வேலூர்
மாநில செய்திகள்
உயிரின பூங்காவில் செஸ் போட்டி
|6 Aug 2022 11:29 PM IST
அமிர்தி உயிரின பூங்காவில் செஸ் போட்டி நடந்தது.
அடுக்கம்பாறை
வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த அமிர்தி உயிரின பூங்காவில் செஸ் போட்டி இன்று நடந்தது.
அமிர்தி வனச்சரக அலுவலர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட உதவி வன பாதுகாவலர் முரளிதரன் முன்னிலை வகித்தார். வேலூர் வனச்சரக அலுவலர் ரவிக்குமார் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ்குமார் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
இதில் 80 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் வனவர்கள் சிவக்குமார், சம்பத் வனக்காப்பாளர்கள் ரவி, ஆனந்தகுமார், வெங்கடேசன், சங்கர், ராகவேந்திரன் மற்றும் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.