< Back
மாநில செய்திகள்
செஸ் ஒலிம்பியாட் போட்டி: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

தினத்தந்தி
|
27 July 2022 10:55 PM IST

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள், செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

கடலூர்,

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, வருகிற 28-ந்தேதி(நாளை) முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்கின்றனர். ஓபன் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் இடம்பெறுகின்றன.

மேலும் இந்தியா சார்பில் விஸ்வநாதன் ஆனந்த், போரிஸ் ஜெல்பாண்ட், ஆர்.பி.ரமேஷ், அபிஜித் குந்தே ஆகியோர் பயிற்சியில்3 அணிகள் களம் இறங்குகின்றன. இதில் 25 வீரர்-வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இதனிடையே சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். அப்போது செஸ் போர்டு போல அமைக்கப்பட்ட தளத்தில் பரதநாட்டியம் ஆடியதோடு, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் செய்திகள்