< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி
|25 July 2022 11:09 PM IST
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி
சென்னைைய அடுத்துள்ள மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடக்கிறது.
இதைெயாட்டி ேகாைவயில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதியை கலெக்டர் அமர்குஷ்வாஹா பெற்றுக்கொண்டாா்.
பின்னா் அவா், ஒலிம்பியாட் ேஜாதிைய கலெக்டர் அலுவலக வளாகத்தை சுற்றி வந்தார்.
அப்ேபாது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஷ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர், முத்தையன் மற்றும் பலர் உடனிருந்தனா்.
முன்னதாக திருப்பத்தூர் மீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த செஸ் போட்டியை கலெக்டர் பார்வையிட்டார்.
அப்போது மாவட்ட முதன்மை கல்வி மதன்குமார் உடனருந்தார்.