< Back
மாநில செய்திகள்
செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சி - சென்னை நேப்பியர் பாலத்தில் இன்று காலை போக்குவரத்து தடை
சென்னை
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சி - சென்னை நேப்பியர் பாலத்தில் இன்று காலை போக்குவரத்து தடை

தினத்தந்தி
|
7 July 2022 9:16 AM IST

செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னை நேப்பியர் பாலத்தில் இன்று காலை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சா்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகிற 28-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை நேப்பியர் பாலத்தில் இந்த போட்டியின் விளம்பர நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை நடைபெறுகிறது. எனவே இந்த நேரத்தில் இப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராஜாஜி சாலையில் இருந்து நேப்பியர் பாலம் வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அனைத்தும் போர் நினைவு சின்னத்தில் இருந்து வலதுபுறம் திரும்பி கொடி மரச்சாலை வழியாக வாலாஜா சந்திப்பு-அண்ணாசாலை-மன்றோ சிலை- பல்லவன் சந்திப்பு- பெரியார் சிலை- அண்ணாசிலை இடதுபுறம் திரும்பி வாலாஜா சாலை வழியாக வலது புறம் உழைப்பாளர் சிலை வழியாக காமராஜர் சாலை சென்றடையலாம். காமராஜர் சாலையில் இருந்து நேப்பியர் பாலம் வழியாக ராஜாஜி சாலை செல்லும் வாகனங்கள் அனைத்தும் உழைப்பாளர் சிலை- வாலாஜா சாலை- அண்ணா சிலை-அண்ணா சாலை-பெரியார் சிலை-பல்லவன் சந்திப்பு- மன்றோ சிலை- வாலாஜா சந்திப்பு- கொடிமரச்சாலை- போர் நினைவுச்சின்னம் வழியாக ராஜாஜி சாலையை சென்றடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்