< Back
மாநில செய்திகள்
செஸ் ஒலிம்பியாட்: செஸ் போர்டு வடிவில் ஜொலிக்கும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவிடம்...!
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: செஸ் போர்டு வடிவில் ஜொலிக்கும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவிடம்...!

தினத்தந்தி
|
28 July 2022 10:26 AM IST

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்க உள்ள நிலையில் செஸ் போர்டு வடிவில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவிடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

இந்த பிரமாண்ட போட்டித் தொடரில், சுமார் 188 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் வீரர்கள் கலந்துக்கொண்டு விளையாட உள்ளனர். இதனால் இந்த செஸ் போட்டி தொடரை, தமிழக அரசு முக்கியமான விஷயமாக கருத்தில் கொண்டுள்ளது.

இதையொட்டி, இந்த பிரமாண்ட விளையாட்டுத் தொடர் குறித்து, தமிழக அரசு பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவிடம் செஸ் போர்டு வடிவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்