< Back
மாநில செய்திகள்
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பஸ் நிறுத்தங்களில் விழிப்புணர்வு ஓவியங்கள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பஸ் நிறுத்தங்களில் விழிப்புணர்வு ஓவியங்கள்

தினத்தந்தி
|
28 July 2022 1:16 PM IST

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு பஸ் நிறுத்தங்களில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று(வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புலிப்பாக்கம் மற்றும் ரஜாகுளிப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் சதுரங்க போட்டியின் அடையாளமான கட்டங்கள், ராஜா, ராணி, மந்திரி, குதிரை, யானை உள்ளிட்ட உருவம் பொறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்