< Back
மாநில செய்திகள்
செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கடலூர்
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
22 July 2022 6:21 PM GMT

சிதம்பரம், விருத்தாசலத்தில் செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிதம்பரம்

விழிப்புணர்வு பேரணி

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி சிதம்பரம்ரெயில் நிலையம் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதை கோட்டாட்சியர் ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மற்றும் காமராஜர் பள்ளி, வீனஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளி, நிர்மலா பள்ளி உள்ளிட்ட தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி காந்தி சிலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது. இதில் மாவட்ட சதுரங்க கழக தலைவர் கேசினோ சேகர், உறுப்பினர்கள் சிவசங்கரன், கமால், இணை செயலாளர் பிரேம்குமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், மகேந்திரன், சிதம்பரம் கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரன், ஆசிரியர்கள் தினேஷ், திருவரசமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இன்பேண்ட் மெட்ரிக் பள்ளி

அதேபோல் சென்னையில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விருத்தாசலம் இன்பேண்ட் மெட்ரிக் பள்ளியில் செஸ் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதை மினி விளையாட்டு அரங்க பொறுப்பாளரும், கால்பந்து பயிற்சியாளருமான அறிவழகன் முன்னிலையில் பள்ளியின் தாளாளர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார். இதில் 188 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்